பள்ளி மாணவர்களுக்கு கலை இலக்கிய போட்டிகள்
பள்ளி மாணவர்களுக்கு கலை இலக்கிய போட்டிகள் நடைபெற்றது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை 6-வது புத்தக திருவிழாவையொட்டி மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலை இலக்கிய போட்டிகள் பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது. போட்டிகளுக்கான தொடக்க விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். போட்டிகளை தொடங்கி வைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி மஞ்சுளா பேசினார். புத்தக திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் தங்கம்மூர்த்தி, மணவாளன், பாலகிருஷ்ணன், வீரமுத்து உள்ளிட்டோர் பேசினர். பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, ஓவியப்போட்டி ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு புத்தக திருவிழா மேடையில் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
Related Tags :
Next Story