கலை ஓவிய கண்காட்சி
கலை ஓவிய கண்காட்சி
தஞ்சாவூர்
தமிழக அரசு கலை பண்பாட்டு துறை, தமிழ்நாடு ஓவியர் நூல் கலை குழு ஆகிய அமைப்புகள் சார்பில் கலை ஓவிய கண்காட்சி கும்பகோணம் சரஸ்வதி பாடசாலையில் நடைபெற்றது. இதில் அரசு கலை பண்பாட்டு துறையில் பதிவு செய்துள்ள பல்வேறு ஓவிய நிபுணர்கள் தமிழகத்தில் உள்ள பழங்கால கலாச்சார சின்னங்கள், வரலாற்று பதிவுகள், நவீன தொழில்நுட்ப போக்கு ஆகியவற்றை ஓவியமாக வரைந்து கண்காட்சியில் வைத்தனர். தமிழ் பாரம்பரிய சின்னங்கள் தமிழர்களுக்கும், உலக நடப்புகளுக்கும் உள்ள தொடர்பு உள்ளிட்டவை பற்றிய பல்வேறு விளக்கங்கள் ஓவிய நிபுணர்களால் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கலை பண்பாட்டு துறையை சேர்ந்த நிர்வாகிகள், ஊழியர்கள், ஓவியத்துறை ஆர்வலர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story