மாற்றுத்திறனாளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி
மாற்றுத்திறனாளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி
கூடலூர்
கூடலூர் ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி மையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான நடனம், பாட்டு, மாறுவேடம் போன்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆர்வத்தோடு பங்கு பெற்று மகிழ்ச்சியாக தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். வண்டிப்பேட்டை பள்ளி தலைமையாசிரியை சரஸ்வதி மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் கூடலூர் ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரதா ஆகியோர் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆசிரியர் பயிற்றுனர்கள் பரமேஸ், இந்திரா, ஷாலினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு ஆசிரியர்கள் ஷாலினி, நித்தியா, ராஜேஷ், நிரோஷா மற்றும் பிசியோதெரபிஸ்ட் புனிதா உள்ளிட்டோர் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாற்றுத்திறனாளி மாணவர்களின் மைய பொறுப்பாளர் நேத்ராவதி மற்றும் உதவியாளர் ஐயாத்தாள் ஆகியோர் குழந்தைகளுக்கு தேவையான உடை அலங்காரம் மற்றும் உணவு வழங்குதல் ஆகிய ஏற்பாடுகளை செய்தனர்.