ஆஸ்திரேலிய தூதரகம் சார்பில் காசிமேட்டில் செயற்கை பவளப்பாறைகள்
மீன் வளத்தை பெருக்க ஆஸ்திரேலிய தூதரகம் சார்பில் காசிமேட்டில் செயற்கை பவளப்பாறைகள் நிறுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை
காசிமேடு,
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஆஸ்திரேலியா தூதரகத்தின் சார்பில் மீன்வளத்தை பெருக்க செயற்கை பவளப்பாறைகள் நிறுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆஸ்திரேலிய தூதரகத்தின் பிளான்ட் டிரஸ்ட் என்ற அரசு சாரா தொண்டு நிறுவன நிதியிலிருந்து ரூ.10 லட்சம் செலவில் சிமெண்டு கலவையால் கூம்பு மற்றும் வட்ட நாற்கரம் வடிவில் செய்யப்பட்ட 100 செயற்கை பவளப்பாறைகள் பைபர் படகுகள் மூலம் சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் கடலுக்குள் எடுத்து செல்லப்பட்டு 20 அடி ஆழத்தில் நிறுவப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை ஆஸ்திரேலிய தூதரக அதிகாரி சாரா கிர்லவ், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் முதன்மை செயலாளர் மங்கத் ராம் சர்மா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story