கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சித் திட்ட சிறப்பு முகாம்


கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சித் திட்ட சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 8 Jun 2022 6:30 PM GMT (Updated: 2022-06-09T00:08:24+05:30)

கொள்ளிடம் பகுதியில் கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சித் திட்ட சிறப்பு முகாம் இன்று நடக்கிறது

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் எழில்ராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொள்ளிடம் வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் சிறப்பு முகாம் நடக்கிறது. இதில், ஆணைக்காரன் சத்திரம், அளக்குடி, அகரவட்டாரம் ஆகிய 3 ஊராட்சிகளில் இன்று(வியாழக்கிழமை) காலை 9.30 மணி முதல் மாலை வரை நடக்கிறது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாய நில பட்டா மாறுதல், உழவர் கடன் அட்டைக்கு விண்ணப்பித்தல், பிரதம மந்திரி கவுரவ நிதி பெற விண்ணப்பித்தல், குளங்களில் வண்டல் மண் எடுக்க விண்ணப்பித்தல், பண்ணை குட்டை அமைக்க விண்ணப்பித்தல் ஆகிய திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story