கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
வேதாரண்யம் நகர தி.மு.க.சார்பில் வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவரும், தி.மு.க. நகர செயலாளருமான புகழேந்தி தலைமை தாங்கினார். மாவட்ட வக்கீல் அணி வெங்கடேஸ்வரன் வரவேற்றார். தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவருமான கவுதமன், தி.மு.க. கொள்கை பரப்பு துணைச்செயலாளர் முரளி ஆகியோர் பேசினர். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாநில விவசாய அணி துணை தலைவருமான வேதரத்தினம், தலைமை செயற்குழு உறுப்பினர், மறைமலை மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் சோழன், நகர மன்ற துணைத்தலைவர் மங்களநாயகி உள்ளிட்ட சார்பு அணியினர் கலந்து கொண்டனர். முடிவில் நகர மன்ற உறுப்பினர் திருக்குமரன் நன்றி கூறினார்.