மாணவர்களுக்கு கலைத்திறன் போட்டி


மாணவர்களுக்கு கலைத்திறன் போட்டி
x

வள்ளியூர் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இடையிலான கலைத்திறன் போட்டி நடந்தது.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண்ணே விழித்தெழு என்ற தலைப்பில் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இடையிலான கலைத்திறன் போட்டி நடந்தது. கல்லூரி நிறுவன தலைவர் என்ஜினீயர் லாரன்ஸ் தலைமை தாங்கினார். தாளாளர் ஹெலன் லாரன்ஸ் குத்துவிளக்கு ஏற்றினார். வள்ளியூர் பங்குதந்தை ஜான்சன் அடிகளார் ஜெபம் செய்தார். கல்லூரி முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் வரவேற்றார். 9 விதமான கலை போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி, குட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெஞ்சமின், வள்ளியூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரைமண்ட் ஆகியோர் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்கள்.

கலை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகளை கல்லூரி நிறுவனத்தலைவர் லாரன்ஸ், கல்லூரி தாளாளர் ஹெலன் லாரன்ஸ், கல்லூரி முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் ஆகியோர் வழங்கினார்கள். ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை பணகுடி புனித அன்னாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பெற்றனர். ஒருங்கிணைப்பாளர் ரஞ்சிதம் நன்றி கூறினார்.

* வள்ளியூர் நேரு நர்சிங் கல்லூரியில் குடியரசு தின விழா நடைபெற்றது. கல்லூரி தலைவர் லாரன்ஸ் தலைமை தாங்கினார். தாளாளர் ஹெலன் லாரன்ஸ் முன்னிலை வகித்தார். மாணவி செல்வி ஹெப்சியா வரவேற்றார். மரியம் நினைவு கல்வி அறக்கட்டளை உறுப்பினர் ஸ்டான்லி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. மாணவி செல்வி அனுப்பிரியா நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் மார்க்ரெட் ரஞ்சிதம், துணை முதல்வர் பேபி உமா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

* ஆவரைகுளம் இம்மானுவேல் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. வள்ளியூர் ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா அருள் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். பள்ளி நிர்வாகி சுந்தரராஜ் வரவேற்று பேசினார். மாணவி வின்சிகா தமிழிலும், மாணவி பபிதா ஆங்கிலத்திலும், மாணவி அன்ஸ் லவ்லி இந்தியிலும் குடியரசு தினம் குறித்து பேசினர். கலைநிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியை ஆசிரியை ராஜேஸ்வரி, மாணவி காயத்ரி ஆகியோர் தொகுத்து வழங்கினர். ஆசிரியை சாந்தி கிருஷ்ணா நன்றி கூறினார்.


Next Story