கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்


கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
x

கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் அம்பல் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சீதளா பாலாஜி தலைமை தாங்கினார். திருமருகல் வட்டார தோட்டக்கலை உதவி அலுவலர் செல்லபாண்டியன், வேளாண்மை உதவி அலுவலர் சிந்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 22 பயனாளிகளுக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் மானிய விலையில் காய்கறி விதைகள், உரங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து வேளாண்துறை சார்பில் 24 பயனாளிகளுக்கு மானிய விலையில் மண்வெட்டி, தென்னங்கன்று உள்ளிட்ட வேளாண்மை உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதில் ஊராட்சி செயலாளர் நடராஜன், ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story