கலை இலக்கிய பெருமன்ற கூட்டம்
வாய்மேடு அருகே கலை இலக்கிய பெருமன்ற கூட்டம் நடந்தது
நாகப்பட்டினம்
வாய்மேடு:
நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலை இலக்கிய பெருமன்ற வேதாரண்யம் கிளை தலைவர் குழந்தைவேலு தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் அம்பிகாபதி வரவேற்றார். நாகை மாவட்டத் தலைவர் கவிஞர் புயல் குமார், துணைத்தலைவர் பார்த்தசாரதி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டச் செயலாளர் சிவருகு பாண்டியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கலை இலக்கிய பெருமன்றத்தின் பொதுச் செயலாளர் அறம், எழுத்தாளர் வாய்மைநாதன் எழுதியுள்ள வெண்மணிக் காப்பியம் நூலினை வெளியிட செல்வராஜ் எம்.பி. பெற்றுக்கொண்டார். முடிவில், நூலாசிரியர் வாய்மைநாதன் ஏற்புரையாற்றினார்.
Related Tags :
Next Story