கலை, அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்:உற்சாகமாக வந்த மாணவ, மாணவிகள்


கலை, அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்:உற்சாகமாக வந்த மாணவ, மாணவிகள்
x
தினத்தந்தி 4 July 2023 12:15 AM IST (Updated: 4 July 2023 5:18 PM IST)
t-max-icont-min-icon

கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் நேற்று தொடங்கின. மாணவ, மாணவிகள் கல்லூரிகளுக்கு உற்சாகமாக வந்தனர்.

தேனி

கலை கல்லூரி

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் கடந்த மாதம் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடந்தது. இதையடுத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கான வகுப்புகள் நேற்று தொடங்கியது.

தேனி மாவட்டத்தில் வீரபாண்டி, கோட்டூர், ஆண்டிப்பட்டி ஆகிய இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டி, கோட்டூர் ஆகிய இடங்களில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. அத்துடன் ஏராளமான தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன.

முதலாமாண்டு வகுப்புகள்

இந்த கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் நேற்று தொடங்கின. இதற்காக கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் வந்தனர். அவர்களை கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் வரவேற்றனர். முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் தொடங்கும் முன்பு நன்னெறி வகுப்புகள் நடந்தன.

கோட்டூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு பட்டயப்படிப்பு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் சரவணக்குமார் தலைமை தாங்கினார். தேனி நாடார் சரசுவதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் மதளைசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். ஆங்கிலத்துறை பேராசிரியை பிரேமா வரவேற்றார். முதலாமாண்டு மாணவர்களுக்கு, முதலாமாண்டு துறைத்தலைவர் ரியாஸ்தீன் பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தினார். முடிவில் பேராசிரியை சுசிலா நன்றி கூறினார்.


Next Story