சோழபுரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா


சோழபுரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா
x

சோளிங்கர் சோழபுரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது.

ராணிப்பேட்டை

சோளிங்கர் பஜார் தெருவில் உள்ள பழமை வாய்ந்த கனககுஜம்பாள் சமேத சோழபுரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மூலவர் சோழபுரீஸ்வரர், கனககுஜம்பாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மங்கள வாத்தியங்களுடன் கோவில் வளாகத்தில் சாமி வலம் வந்து கோபுரதரிசனம் நடந்தது. தொடர்ந்து மாட வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் சோளிங்கர் மற்றும் சுற்று பகுதி கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story