படியில் தொங்கியபடி பயணம் செய்த இளைஞர்கள்
குன்னம் அருகே படியில் தொங்கியபடி இளைஞர்கள் பயணம் செய்தனர். இதையடுத்து, அப்பகுதியில் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
அரியலூர்
அரியலூரில் இருந்து குன்னம், ஒதியம், சித்தளி, பேரளி வழியாக பெரம்பலூருக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்பகுதியில் மாலை வேளையில் போதிய பஸ் வசதி இல்லாத காரணத்தினால் பலரும் கூட்டமாக ஒரே பஸ்சில் பயணம் செய்யக்கூடிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. அதில் இளைஞர்கள் சிலர் படியில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சிகளையும் காண முடிந்தது.
கொரோனா நேரத்தில், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருப்பதே தவறென கூறப்படும் நிலையில், இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக, அதுவும் பஸ் படியில் பெரம்பலூர் வரை தொங்கியபடி பயணம் செய்த காட்சி சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story