ஆறுமுகநேரி நகரபஞ்சாயத்து பகுதியில்55 இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்க முடிவு
ஆறுமுகநேரி நகரபஞ்சாயத்து பகுதியில் 55 இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து உறுப்பினர்களின் அவசரக் கூட்டம் நேற்று அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர பஞ்சாயத்து தலைவர் கலாவதி கல்யாண சுந்தரம் தலைமை தாங்கினார். நிர்வாக அதிகாரி கி. கணேசன், துணைத்தலைவர் கல்யாணசுந்தரம், நகர பஞ்சாயத்து பொறியாளர் ஆவடைபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணை மற்றும் மணிமுத்தாறு அணைகளில் நீர் இருப்பு குறைந்த நிலையில் மேலும் தாமிரபரணி ஆற்றிலும் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. பருவ மழையும் பொய்த்துவிட்ட நிலையில் குடிதட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து கவுன்சிலர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
பின்னர், ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உடனடியாக நடவடிக்ைக எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதற்காக 55 இடங்களில் குடிநீர் தொட்டகள் அமைத்து பொது மக்களுக்கு தேவையான குடிநீரை வினியோகம் செய்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.