ஆறுமுகநேரி போலீஸ் குடியிருப்பில் குறைகள் கேட்ட துணை சூப்பிரண்டு


ஆறுமுகநேரி போலீஸ் குடியிருப்பில்   குறைகள்  கேட்ட துணை சூப்பிரண்டு
x

ஆறுமுகநேரி போலீஸ் குடியிருப்பில் குறைகள் துணை போலீஸ் சூப்பிரண்டு குறைகள் கேட்டார்.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி போலீஸ் குடியிருப்பில் 72 போலீசார் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புக்கு திருச்செந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆவுடையப்பன், ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் வீடு வீடாக சென்று போலீசாரின் குடும்பத்தினரிடம் குறைகள் கேட்டனர். பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து போலீசாரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக துணை சூப்பிரண்டு தெரிவித்தார்.

பின்னர் அந்த குடியிருப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் செல்வகுமார் மகள் துர்கா கடந்த 10-ம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்ததற்காக துணை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டி பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story