ஆறுமுகநேரியில் தெற்கு மாவட்ட பா.ஜ.க.நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


ஆறுமுகநேரியில் தெற்கு மாவட்ட பா.ஜ.க.நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 20 Sept 2023 12:15 AM IST (Updated: 20 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரியில் தெற்கு மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. மண்டல நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் சாகுபுரம் விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமை தாங்கினார்.

மாவட்ட பொதுச்செயலாளர்கள் ராஜா, சிவமுருக ஆதித்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் கட்சி வளர்ச்சிப்பணி, வரும் நாடாளுமன்றத் தேர்தல் பணி, என்மண் என் மக்கள் பாதயாத்திரைக்கு பொதுமக்கள் அளித்த வரவேற்பு குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் தெற்கு மாவட்ட துணை தலைவர்கள் செல்வராஜ், ரேவதி, மாநில மகளிர் அணி செயலாளர் நெல்லையம்மாள் மற்றும் நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story