ஆறுமுகநேரியில்நடிகர் விஜய் பிறந்தநாள் விழா
ஆறுமுகநேரியில் நடிகர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரியில் நடிகர் விஜய்யின் 49-வது பிறந்தநாள் விழா விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் மற்றும் அப்போலோ பார்மசி இணைந்து நடத்திய இலவச ரத்த பரிசோதனை மற்றும் சர்க்கரை அளவு கண்டறிதல் பரிசோதனை முகாம் ஆறுமுகநேரி பஜாரில் நடந்தது.
இந்த இலவச பரிசோதனை முகாம் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது. இதில் 100 பேர் பயனடைந்தனர். தொடர்ந்து மதியம் ஆறுமுகநேரி சீனந்தோப்பில் உள்ள லைட் முதியோர் இல்லத்திற்கு தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் பில்லா ஜெகன் தலைமையில் மதிய உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திருச்செந்தூர் ஒன்றிய தலைமை தலைவர் விஜய் ஆனந்த், பொருளாளர் குட்டி ராஜா, துணை செயலாளர் மணி மற்றும் முதியோர் இல்ல நிறுவனர் பிரேம் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆறுமுகநேரி நகர டாக்டர் விஜய் மக்கள் இயக்க தலைவர் வனமுருக பிரகாஷ், ஆத்தூர் நகர தலைமை அமைப்பு நிர்வாகிகளும் செய்தனர்.