ஆறுமுகநேரியில்தி.மு.க. மகளிரணி உறுப்பினர்சேர்க்கை கூட்டம்


ஆறுமுகநேரியில்தி.மு.க. மகளிரணி உறுப்பினர்சேர்க்கை கூட்டம்
x
தினத்தந்தி 5 Aug 2023 12:15 AM IST (Updated: 5 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரியில் தி.மு.க. மகளிரணி உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரியில் நகர தி.மு.க. மகளிர் தொண்டரணி ஆலோசனைக்கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு நகர செயலாளர் ஏ.கே. நவநீதபாண்டியன் தலைமை தாங்கினார். மாநில மகளிரணி பிரசார குழு செயலாளர் ஜெசி பொன்ராணி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், திருச்செந்தூர் நகர செயலாளர் வாள்சுடலை ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. சார்பில் தி.மு.க. தொண்டரணி மகளிருக்கு கைக்கடிகாரம் வழங்கப்பட்டது. மேலும் மகளிர் உறுப்பினர் சேர்க்கைக்கான படிவம் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் தெற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சாரதா பொன்இசக்கி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆரோக்கிய மேரி, துணை அமைப்பாளர் தயாநிதிபாண்டியன் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story