ஆறுமுகநேரியில்வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை


ஆறுமுகநேரியில்வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
x

ஆறுமுகநேரியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி சுப்ரமணியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு இசக்கி முத்து, இசக்கிமுருகன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இசக்கிமுத்து சென்னையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். தாய், தந்தையர் இறந்து விட்ட நிலையில் இசக்கி முருகன் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். திருமணமாகாத நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். தொடர்ந்து அவர் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார். மேலும் இவருக்கு குடிபழக்கமும் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்குள் தாயின் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆறுமுகநேரி போலீசார் சம்பவ வீ்ட்டுக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.


Next Story