ஆறுமுகநேரி கே.ஏ. மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


ஆறுமுகநேரி கே.ஏ. மேல்நிலைப்பள்ளி  முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
x
தினத்தந்தி 19 Dec 2022 12:15 AM IST (Updated: 19 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரி கே.ஏ. மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி கே.ஏ. மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்றவர்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

ஆறுமுகநேரி கே.ஏ. மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1955-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரையிலும் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

ஆறுமுகநேரி தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவரும், ஓய்வுபெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுமான கே.எஸ்.முருகேசன் தலைமை தாங்கினார்.

முன்னாள் மாணவரும், சென்னை ஐகோர்ட்டு நீதிபதியுமான ஜெகதீஷ் சந்திரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா மலரை வெளியிட்டார். அதனை முன்னாள் மாணவரும், அருணாசலபிரதேச மாநில திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை செயலாளருமான எஸ்.டி.சுந்தரேசன் பெற்றுக் கொண்டார்.

நினைவுப்பரிசு

முன்னாள் மாணவ-மாணவிகள் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தனர். பள்ளி தொடக்க ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவரும், என்ஜினீயருமான தெ.பழனிசாமிக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.

முன்னாள் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிக்கூடத்துக்கு சென்று நண்பர்களுடன் புகைப்படம் எடுத்தும், வகுப்பறைகளில் அமர்ந்தும் மகிழ்ந்தனர். முன்னாள் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

விழாவில் முன்னாள் மாணவர்களான ஓய்வுபெற்ற சுகாதார துறை கூடுதல் இயக்குனர் டாக்டர் ஜெயக்குமார், ஓய்வு பெற்ற சி.ஆர்.பி.எப். அதிகாரி மணிமுத்து ராமலிங்கம், நூல் ஆசிரியர் அமுதா பாலகிருஷ்ணன், சமூக ஆர்வலர் கணபதி, விவேகானந்தன், ஓய்வுபெற்ற ஆசிரியை ஜெய ஜானகி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக சுபத்ரா குழுவினர் இறைவணக்கம் பாடினர். முன்னாள் மாணவர்கள் குழு செயலாளர் ஜி.ஆர்.சுமதி வரவேற்று பேசினார். ஜான் சாமுவேல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பாலம் இருளப்பன் நன்றி கூறினார்.


Next Story