அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியலில் நூதன முறையில் திருட முயற்சி
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியலில் நூதன முறையில் திருட முயற்சி செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.
சம்பவத்தன்று கோவில் வளாகத்தில் உள்ள ஒரு உண்டியலில் 30 வயது மதிக்கத்தக்க மொட்டை அடித்த நபர் ஒருவர் நூதன முறையில் குச்சியை உள்ளே விட்டு பணம் திருட முயற்சிப்பது போன்று கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கோவில் அலுவலர்கள் அதில் பதிவான நபர் யார் என்று விசாரித்தனர்.
இவர் அவ்வப்போது வந்து இது போன்ற செயலில் ஈடுபடுவது தெரியவந்தது.
இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு கேமராவில் பதிவான நபரின் புகைப்படத்தை எடுத்து திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story