பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு


பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
திருப்பூர்


மேற்கு தொடர்ச்சிமலையில் சாரல் மழைபெய்வதால் பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பஞ்சலிங்க அருவி

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அருவிக்கு மேல் குருமலை, கீழ்குருமலை, குழிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகின்ற கொட்டையாறு, பாரப்பட்டியாறு, குருமலைஆறு, கிழவிப்பட்டிஆறு, உப்புமண்ணபட்டிஆறு, பாலாறு, உழுவியாறு உள்ளிட்டவை நீராதாரமாக உள்ளது.

வனப்பகுதியில் மழைப்பொழிவு ஏற்படும்போது ஆறுகளில் நீர்வரத்தை பெறுகிறது.

வனப்பகுதியில் பல்வேறு பகுதியில் ஓடிவருகின்ற ஆறுகள் பஞ்சலிங்கங்களுக்கு அருகில் ஒன்று சேர்ந்து அருவியாக கொட்டுகிறது.

வனப்பகுதியில் சிதறி கிடக்கும் பல்வேறு விதமான மூலிகை சருகுகள் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது அதில் கரைந்து விடுகிறது.அருவியில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர்.

நீர்வரத்து அதிகரிப்பு

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழைக்கு பின்பு அருவியின் நீராதாரங்களில் மழை பெய்யவில்லை. ஆனாலும் ஓரளவுக்கு நீர்வரத்து இருந்து வந்தது.இதையடுத்து சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்க அருவிக்கு உற்சாகத்தோடு வந்து குளித்து மகிழ்ந்தனர். இந்த சூழலில் வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக அருவியின் நீராதாரங்களில் நீர்வரத்து குறைந்ததால் பஞ்சலிங்க அருவியிலும் சுவற்றை ஒட்டியவாறு தண்ணீர் விழுந்தது. இதனால் பஞ்சலிங்க அருவிக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.

இந்த சூழலில் நேற்று அறிவியல் நீராதாரங்களில் திடீரென மழை பெய்தது.இதனால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

கோடை வெப்பத்தை தணிக்க வந்து ஏமாற்றம் அடைந்த சுற்றுலா பயணிகள் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Next Story