அரவிந்த் சரவணா செராமிக்ஸ் ஷோரூம் திறப்பு விழா
எல்.ஆர்.பாளையத்தில் அரவிந்த் சரவணா செராமிக்ஸ் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது.
விழுப்புரம்:
புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டை அடுத்த எல்.ஆர்.பாளையம் மெயின் ரோட்டில் அரவிந்த் சரவணா செராமிக்ஸ் சார்பில் மிக பிரமாண்டமான டிஸ்பிளேயுடன் கூடிய புதிய ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு அரவிந்த் செராமிக்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குனர் குமார் தலைமை தாங்கி ஷோரூமை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
விழாவிற்கு அரவிந்த் செராமிக்ஸ் இயக்குனர்கள் அரவிந்த்பாபு, அனுஜ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரவிந்த் சரவணா செராமிக்ஸ் விற்பனையாளர் யோகானந்த் சரவணன் அனைவரையும் வரவேற்றார்.
இவ்விழாவில் மண்டல மேலாளர் கேசவன், மதகடிப்பட்டு சுரேஷ், பத்மநாபன், திருக்கோவிலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடேசன், விழுப்புரம் நகரமன்ற முன்னாள் தலைவர் ஜனகராஜ், ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் ராமதாஸ், கண்ணன், எசாலம் பன்னீர், ஜெயலலிதா பேரவை செயலாளர் சரவணக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் லட்சுமிநாராயணன், அரசு ஒப்பந்ததாரர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி, உதவி செயற்பொறியாளர் இளங்கோ, டாக்டர் முத்தையன், பா.ம.க. மாநில துணைத்தலைவர் அன்புமணி, மாவட்ட நிர்வாகிகள் தங்கஜோதி, புகழேந்தி, பழனிவேல், விக்கிரவாண்டி பேரூராட்சி தலைவர் அப்துல்சலாம், தி.மு.க. நகர செயலாளர்கள் சக்கரை, நைனாமுகமது மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து கம்பெனி மொத்த விற்பனையாளர்கள், பொறியாளர்கள், டைல்ஸ் பதிப்பாளர்கள், கம்பெனி ஊழியர்கள் கலந்துகொண்டனர். முடிவில் விற்பனையாளர்கள் எரிச்சனாம்பாளையம் சரவணன், புவனேஸ்வரி, அன்பரசி குடும்பத்தினர் வீரப்பன், சுபா, தயாளன், ஜனா ஆகியோர் நன்றி கூறினர்.