தமிழ் உள்ள வரை தி.மு.க. இருக்கும்


தமிழ் உள்ள வரை தி.மு.க. இருக்கும்
x

தமிழ் உள்ள வரை தி.மு.க. இருக்கும் என திருச்சி சிவா எம்.பி. கூறினார்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்ட பயிற்சி பாசறை கூட்டம் திருத்தங்கலில் நேற்று நடைபெற்றது. சிவகாசி மாநகர செயலாளர் உதயசூரியன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். மாநகராட்சி கவுன்சிலர் வெயில் ராஜ் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக திருச்சி சிவா எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது, தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகளை லட்சியவாதிகளாக மாற்றத்தான் இந்த பாசறை கூட்டம். மன்னர் போருக்கு புறப்படுவதற்கு முன்னர் போர் முறை குறித்து விளக்க கூட்டப்படும் கூட்டமே பாசறை கூட்டம். நீங்கள் தொண்டர்கள் இல்லை. போர் வீரர்கள். தி.மு.க.வில் தான் அனுபவமிக்க நிர்வாகிகளும், இளைஞர்களும் அதிகம் உள்ளனர். 1980-ல் மதுரையில் இளைஞர் அணி தொடங்கப்பட்டது. இன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் இதில் உள்ளனர். 1967-ல் விருகம்பாக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணா பேசும் போது, இன்னும் 50 ஆண்டுகளுக்கு தி.மு.க. இருக்கும் என்றார். அவர் கூறியதையும் கடந்து தி.மு.க. கம்பீரமாக நடைபேட்டு வருகிறது. தமிழ் உள்ள வரை தி.மு.க. இருக்கும். தேர்தல் என்னும் போர்களத்துக்கு நீங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் சபாபதி மோகன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



Related Tags :
Next Story