2-ம் நிலை காவலர் தேர்வை 12,577 பேர் எழுதினர்


2-ம் நிலை காவலர் தேர்வை 12,577 பேர் எழுதினர்
x

வேலூர் மாவட்டத்தில் 2-ம் நிலை காவலர் தேர்வை 12,577 பேர் எழுதினர்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் 2-ம் நிலை காவலர் தேர்வை 12,577 பேர் எழுதினர்.

எழுத்துத்தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2-ம் நிலை காவலர்கள், 2-ம் நிலை சிறை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்களுக்கான எழுத்துத்தேர்வு வேலூர் மாவட்டத்தில் 9 இடங்களில் உள்ள 15 மையங்களில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வினை 2,192 பெண்கள் உள்பட 14,991 பேர் எழுத விண்ணப்பித்திருந்தனர். இந்த தேர்வு பாதுகாப்பு பணிக்கு 1,200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

அவர்களுக்கு தேர்வு நேரத்தில் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் அறிவுறுத்தி இருந்தார். நேற்று காலை முதலே தேர்வு மையத்துக்கு தேர்வர்கள் வரத்தொடங்கினர். காலை 8 மணி முதல் தேர்வு மையத்துக்குள் அவர்களை போலீசார் அனுமதித்தனர்.

12,577 பேர் எழுதினர்

பெண்களுக்கு காட்பாடி கிங்ஸ்டன் என்ஜினீயரிங் கல்லூரி, சன்பீம் சீனியர் செகண்டரி பள்ளி ஆகிய 2 இடங்களில் தேர்வு நடத்தப்பட்டது. அங்கு பெண் தேர்வர்கள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

தேர்வு மையங்களை ஐ.ஜி. காமினி மற்றும் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது அவர்கள் தேர்வர்களின் வருகை, வினாத்தாள் வழங்குதல், விடைத்தாள் பெறுதல் குறித்து ஆய்வு செய்தனர். மாவட்டம் முழுவதும் நடந்த இந்த தேர்வினை 12,577 பேர் எழுதினர். 2,414 பேர் தேர்வு எழுதவில்லை.


Next Story