பிளஸ்-2 முடிப்பவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவதால்கல்லூரியில் அதிகமான மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளனர்;அமைச்சர் சு.முத்துசாமி தகவல்


பிளஸ்-2 முடிப்பவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவதால்கல்லூரியில் அதிகமான மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளனர்;அமைச்சர் சு.முத்துசாமி தகவல்
x

பிளஸ்-2 முடிப்பவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவதால் கல்லூரியில் இடைநிற்றல் குறைந்து அதிகமான மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளனர் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

ஈரோடு

கடத்தூர்

பிளஸ்-2 முடிப்பவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவதால் கல்லூரியில் இடைநிற்றல் குறைந்து அதிகமான மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளனர் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

கல்லூரியில் இடைநிற்றல் குறைவு

கோபியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனிதநேய வார நிறைவு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு பேசும்போது கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்களுக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பிளஸ்-2 முடித்தபிறகு கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இடைநிற்றல் குறைந்து அதிகமான மாணவ-மாணவிகள் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.

அரசின் நோக்கம்

அனைவருக்கும் கை கொடுத்து உதவ வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கமாக உள்ளது. எதிர்காலத்தில் மாணவ-மாணவிகள் படித்து நல்ல நிலையை அடைய வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாணவனின் திறமையும் ஆசிரியர்களுக்கு தான் தெரியும். அதை கண்டுபிடித்து நல்ல மாணவர்களை உருவாக்க வேண்டும்.

இ்வ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

மாணவ-மாணவிகளுக்கு பரிசு

தொடர்ந்து மனிதநேய வார நிறைவு விழாவில் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். விழாவில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நல்லசிவம், விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் மோகன்ராஜ், நலக்குழு உறுப்பினர் குப்புசாமி, வக்கீல் கிருஷ்ணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மீனாட்சி வரவேற்று பேசினார். முடிவில் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் கணேசன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story