ஏரி நிரம்பியதால் ஆடு வெட்டி, பொங்கல் வைத்து வழிபாடு


ஏரி நிரம்பியதால் ஆடு வெட்டி, பொங்கல் வைத்து வழிபாடு
x

கே.வி.குப்பம் அருகே ஏரி நிரம்பியதால் ஆடு வெட்டி, பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

வேலூர்

கே.வி.குப்பத்தை அடுத்த வடுகந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஆண்டாள் ஏரி 58 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் மூலம் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதிபெறும். அண்மையில் தொடர்ந்து பெய்துவந்த மாண்டஸ் புயல் மழை காரணமாக ஏரி நிரம்பி கோடி போனது. இதைக் கொண்டாடும் வகையில் கிராமத்தினர் ஆடு வெட்டி, பொங்கல் வைத்து, கற்பூரம் ஏற்றி, வழிபாடு செய்தனர்.

நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்திஜெயபால், உள்ளாட்சி பிரமுகர்கள், ஊர்பெரியவர்கள், வாலிபர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.


Next Story