கோடை விடுமுறை முடிய உள்ளதால் ஈரோடு பஸ், ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது
கோடை விடுமுறை முடிய உள்ளதால் ஈரோடு பஸ், ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.
கோடை விடுமுறை முடிய உள்ளதால் ஈரோடு பஸ், ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
கோடை விடுமுறை
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் நாளை மறுநாள் (புதன்கிழமை) திறக்கப்பட உள்ளன. இதனால் கோடை விடுமுறையை கொண்டாடுவதற்காக வெளியூர் சென்றிருந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை பெற்றோர்களுக்கு விடுமுறை இருந்ததால், உறவினர் வீடுகளில் விட்டு இருந்த தங்களது குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து வந்தனர். இதனால் பஸ், ரெயில்களில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
ஈரோடு ரெயில் நிலையத்தில் தென்மாவட்டங்களுக்கு சென்ற ரெயில்களிலும், அங்கிருந்து ஈரோடு வந்த ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட்டம் அலைமோதியது.
பயணிகள் கூட்டம்
இதேபோல் ரெயில்களில் முன்பதிவு செய்யாத பயணிகள் பஸ்களில் சென்றனர். இதன் காரணமாக பெரும்பாலான பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. உட்கார இடம் கிடைக்காமல் நின்றுக்கொண்டே பயணம் செய்தனர். ஈரோடு பஸ் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இரவு நேரத்தில் பஸ்கள் கிடைக்காமல் பயணிகள் பலர் அவதி அடைந்தனர்.