கல்வெட்டில் பெயர் இல்லாததால் அ.தி.மு.க. கவுன்சிலர் போராட்டம்


கல்வெட்டில் பெயர் இல்லாததால்  அ.தி.மு.க. கவுன்சிலர் போராட்டம்
x

கல்வெட்டில் பெயர் இல்லாததால் அ.தி.மு.க. கவுன்சிலர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

விருதுநகர்


விருதுநகர் யூனியன் பெரிய பேராலி பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் ரூ.22 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெறுவதாக இருந்தது. இப்பகுதியின் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலராக அ.தி.மு.க.வை சேர்ந்த மச்சராஜா உள்ளார். ஆனால், பஞ்சாயத்து அலுவலக கட்டிட திறப்பு விழா கல்வெட்டில் அவரது பெயர் இடம் பெறவில்லை எனக் கூறி மச்சராஜா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து பஞ்சாயத்து அலுவலக கட்டிட திறப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.



Next Story