பெண் நகையுடன் தவறவிட்ட பர்சை எடுத்து சென்ற ஆசாமி சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
தக்கலை பஸ் நிலையம் முன்பு இளம்பெண் நகையுடன் தவறவிட்ட பர்சை ஒரு நபர் எடுத்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தக்கலை,
தக்கலை பஸ் நிலையம் முன்பு இளம்பெண் நகையுடன் தவறவிட்ட பர்சை ஒரு நபர் எடுத்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்த விவரம் வருமாறு:-
3 பவுன் நகை
தக்கலை அருகே உள்ள கல்குறிச்சியை சேர்ந்தவர் அனுஷா (வயது23). இவர் தக்கலை பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று அனுஷா தனது 3 பவுன் நகையை அடகு வைப்பதற்காக பர்சில் வைத்து விட்டு தக்கலை பஸ் நிலையம் வந்தார். பஸ் நிலையத்தில் இருந்து வங்கிக்கு சென்ற பின்பு பர்சை பார்த்தபோது அது தவறி கீழே விழுந்தது தெரியவந்தது. உடனே அனுஷா தான் வந்த வழி முழுவதும் தேடினார். ஆனால், பர்சு கிடைக்கவில்லை.
போலீசில் புகார்
இது குறித்து அனுஷா தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் பஸ் நிலையம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்ேபாது, சாலையில் கிடந்த பர்சை 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் எடுத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இந்த காட்சியின் அடிப்படையில் அந்த நபரை போலீசார் தேடி வருகிறார்கள். இதற்கிடையே இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.