நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிளில் 'லிப்ட்' கொடுத்தவரிடம் நகை பறித்த ஆசாமி


நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கொடுத்தவரிடம் நகை பறித்த ஆசாமி
x
தினத்தந்தி 19 Feb 2023 12:15 AM IST (Updated: 19 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிளில் ‘லிப்ட்' கொடுத்த நபரிடம் 3 பவுன் நகையை பறித்து சென்ற டிப்டாப் ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.

கன்னியாகுமரி

நாகா்கோவில்,

நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிளில் 'லிப்ட்' கொடுத்த நபரிடம் 3 பவுன் நகையை பறித்து சென்ற டிப்டாப் ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.

'லிப்ட்' கேட்டு

நாகர்கோவில் பள்ளிவிளை ரெயில்வே ரோடு பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 59). இவர் நேற்று வடசேரி கிருஷ்ணன் கோவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு டிப்-டாப்பாக உடை அணிந்திருந்த வாலிபர் ஒருவர் குமரேசனின் மோட்டார் சைக்கிளை நிறுத்தி லிப்ட் கேட் டார். மேலும் தன்னை வடசேரி பஸ் நிலையத்தில் இறக்கி விடும்படி கூறினார். உடனே குமரேசனும் அந்த வாலிபரை நல்ல எண்ணத்துடன் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார்.

வெள்ளாளர் தெரு அருகே வந்த போது டிப்டாப் ஆசாமி, இங்கேயே என்னை இறக்கி விடும்படி கூறியுள்ளார். உடனே குமரேசனும் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

நகை பறித்த ஆசாமி

அந்த சமயத்தில் ஆசாமி திடீரென குமரேசன் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து விட்டு தப்பி ஓடினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அவர் திருடன், திருடன் என கத்தினார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ஆசாமி அங்கிருந்து தப்பி விட்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்டாப் ஆசாமியை தேடிவருகின்றனர்.


Next Story