தீயில் எரிந்து ஆட்டுக்கொட்டகை சாம்பல்


தீயில் எரிந்து ஆட்டுக்கொட்டகை சாம்பல்
x
தினத்தந்தி 27 Aug 2023 12:15 AM IST (Updated: 27 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டை அருகே தீயில் எரிந்து ஆட்டுக்கொட்டகை சாம்பலானது.

திருவாரூர்

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டையை அடுத்த ஆலங்காடு ஈ.சி.ஆர். காலனி பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார். இந்த ஆடுகளை அடைக்க தனது வீட்டின் அருகே கொட்டகை அமைத்திருந்தார். இரவில் இந்த கொட்டகையில் ஆடுகளை கட்டுவது வழக்கம். மேலும் வீட்டுக்கு தேவையான பொருட்களையும் அங்கு வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென ஆட்டுக்கொட்டகை தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து தீயை அமைக்க முயன்றனர். அப்போது காற்று பலமாக வீசியதால் தீ ஆட்டுக்கொட்டகை முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து முத்துப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படை வீரர்கள் சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் கொட்டகை முழுவதும் எரிந்து சாம்பலானது. இந்த தீவிபத்தில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பின. ஆனால் கொட்டகையில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பசீர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து யாராவது கொட்டகைக்கு தீவைத்தார்களா? அல்லது தீவிபத்து ஏற்பட்டதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story