பாதுகாப்பு கேட்டு கோபி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்


பாதுகாப்பு கேட்டு கோபி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
x
தினத்தந்தி 2 Jun 2023 2:44 AM IST (Updated: 2 Jun 2023 11:43 AM IST)
t-max-icont-min-icon

கோபி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது

ஈரோடு

கோபி அருகே உள்ள கூகலூரை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 27). இவர் 10-ம் வகுப்பு படித்துவிட்டு மர வியாபாரம் செய்து வருகிறார். கோபி நாயக்கன்காட்டை சேர்ந்தவர் பரமேஸ்வரி (22). இவர் பி.எஸ்.சி முடித்து விட்டு வீட்டில் இருந்தபடி தையல் வேலை செய்து வருகிறார். பரமேஸ்வரி பள்ளிக்கூடத்துக்கு சென்று கொண்டிருந்தபோது தனியார் பஸ் கண்டக்டராக ரவிக்குமார் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனால் 2 பேரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களுடைய காதலுக்கு 2 பேரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் ரவிக்குமாரும், பரமேஸ்வரியும் வீட்டை விட்டு வெளியேறி மேவாணியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு கோபி மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து 2 பேரின் பெற்றோர்களையும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பரமேஸ்வரியை ரவிக்குமார் தன்னுடைய வீட்டுக்கு அழைத்து சென்றார்.


Next Story