பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை


பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்:

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கொத்தனூரை சேர்ந்தவர் வாசுதேவன் மனைவி அனுசுயா (வயது 21). இவர்களுக்கு 24.3.2021 அன்று திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜோதிகா (1) என்ற குழந்தை உள்ளது.

இவர்களது திருமணத்தின்போது அனுசுயாவின் பெற்றோர், 6 பவுன் நகையும், ரூ.1 லட்சம் மதிப்பிலான மோட்டார் சைக்கிள் மற்றும் சீர்வரிசை பொருட்களை வாசுதேவன் வீட்டிற்கு வழங்கினர்.

இந்நிலையில் அனுசுயாவிடம் உனது பெற்றோர் வீட்டில் இருந்து மேலும் நகை, சீர்வரிசை வாங்கி வரும்படி கேட்டு அனுசுயாவை அவரது கணவர் வாசுதேவன், மாமனார் மாயக்கண்ணன், மாமியார் காளியம்மாள், வாசுதேவனின் சகோதரர் சிலம்பரசன், இவரது மனைவி கல்பனா ஆகியோர் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து அனுசுயா, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வாசுதேவன் உள்ளிட்ட 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story