அடிப்படை வசதி கோரிபொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


அடிப்படை வசதி கோரிபொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:15:37+05:30)

அடிப்படை வசதி செய்து தரக்கோரி, அனைத்து கள்ளர் கூட்டமைப்பு சார்பில், போடி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேனி

போடி நகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு புதூர் பகுதியில் வலசத் துறை ரோட்டில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் குடிநீர், தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் அந்த பகுதியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி, அனைத்து கள்ளர் கூட்டமைப்பு சார்பில், போடி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது புதூர் பகுதியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி கோஷங்களை எழுப்பினர்.


Related Tags :
Next Story