பவானியில் கூலி உயர்வு கேட்டுகைத்தறி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்


பவானியில் கூலி உயர்வு கேட்டுகைத்தறி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
x

பவானியில் கூலி உயர்வு கேட்டு கைத்தறி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினாா்கள்.

ஈரோடு

பவானி

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்த கைத்தறி மானிய கோரிக்கையின் போது கைத்தறி துறை அமைச்சர் கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என அத்துறை அமைச்சர் தெரிவித்தார். இதனை உடனே அமல்படுத்தக்கோரி கைத்தறி ஜமுக்காளம், பெட்ஷீட் நெசவாளர்கள், சாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பவானி அந்தியூர் பிரிவு சாலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். சங்கத்தின் துணைத் தலைவர் ராசம்மாள், பொருளாளர் கோவிந்தன், துணைச் செயலாளர் அல்லி முத்து, பெரிய மோளபாளையம் பகுதி செயலாளர் வேலுசாமி, நிர்வாக உறுப்பினர் நஞ்சப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் செயலாளர் சித்தையன், மாநில செயலாளர் சின்னசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story