நகைக்கடை உரிமையாளருக்கு கொலைமிரட்டல்
சாத்தான்குளத்தில் நகைக்கடை உரிமையாளருக்கு கொலைமிரட்டல் விடுத்த 2பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் பழைய மீன் கடை தெருவை சேர்ந்தவர் சுடலையாண்டி மகன் ஆண்டிஅய்யப்பன் (49). இவர் சாத்தான்குளம் பஜாரில் நகைக் கடை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். இவரிடம் சாத்தான்குளத்தை சேர்ந்த துரைராஜ் மகன் ஜோசப்ஜெபராஜ் என்பவர் தங்க நகையை அடகு வைத்திருந்தார். குறிப்பிட்ட தவணையில் நகையை திரும்ப பெறாததால் கடை உரிமையாளர், நகையை ஏலம் விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜோசப்ஜெபராஜ் மற்றும் அவரது சகோதரர் எட்வர்டு ராஜதுரை ஆகிய இருவரும் அவரை அவதூறாக பேசியதுடன் கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து ஆண்டிஅய்யப்பன் கொடுத்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தி ஜோசப் ஜெபராஜ் உள்ளிட்ட 2பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story