மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதை தட்டிக்கேட்டதால் தாக்குதல்; 4 பேர் கைது

மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதை தட்டிக்கேட்டதால் தாக்குதல்; 4 பேர் கைது
x

மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதை தட்டிக்கேட்டதால் தாக்குதல்; 4 பேர் கைது

மதுரை

மதுரை புது ராம்நாடு ரோடு, தமிழன் நகரை சேர்ந்தவர் துரைப்பாண்டி (வயது 41). சம்பவத்தன்று இவர் வீட்டின் முன்பு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளனர். துரைப்பாண்டி அவர்களை சத்தம் போட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் 4 பேர் சேர்ந்து அவரை தாக்கி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த முத்துச்செல்வம்(25), அவரது தம்பி விஜய்(20), கரிசல்குளம் தங்கபாண்டி (25), சந்தோஷ் (21) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story