வாலிபர் மீது தாக்குதல்; 3 பேர் கைது


வாலிபர் மீது தாக்குதல்; 3 பேர் கைது
x

வாலிபர் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் அருகே வில்வனம்புதூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் சுரேஷ் (வயது 20). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த லட்சுமணன் (29), பாண்டி (28), திருக்குறுங்குடியைச் சேர்ந்த சீனிவாசன் (30) ஆகியோருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கோவில் கொடை விழாவில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று சுரேஷ் வில்வனம்புதூர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தார்.

அப்போது, அங்கு வந்த மேற்கண்ட 3 பேரும், சுரேஷை கம்பு மற்றும் ஆயுதத்தால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வள்ளியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமணன், பாண்டி, சீனிவாசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


Next Story