கல்லூரி விரிவுரையாளர் மீது தாக்குதல்


கல்லூரி விரிவுரையாளர் மீது தாக்குதல்
x

விருதுநகர் அருகே கல்லூரி விரிவுரையாளர் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள சங்கு ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 53). கல்லூரி முதுநிலை விரிவுரையாளராக உள்ளார். இவரது மனைவி காசியம்மாள். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.இதற்கிடையே குடும்ப தகராறு காரணமாக கருப்பசாமி தனது மனைவி காசியம்மாளுக்கு விவாகரத்து நோட்டீசு அனுப்பினார். பின்னர் தனது மகன்களின் நலன் கருதி மனைவியை ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் காசியம்மாளின் சகோதரர் பாலமுருகன், தாயார் சுப்புலட்சுமி மற்றும் ஊர் நாட்டாமை அய்யனார் ஆகிய 3 பேரும் கருப்பசாமியை வழிமறித்து தாக்கி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து கருப்பசாமி இவர்கள் 3 பேர் மீதும் நடவடிக்கை கோரி விருதுநகர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் கோர்ட்டு உத்தரவுபடி ஆமத்தூர் போலீசார் பாலமுருகன், சுப்புலட்சுமி, மற்றும் அய்யனார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Related Tags :
Next Story