வைத்தியரை தாக்கி 4 பவுன் சங்கிலி பறிப்பு
குளச்சல் அருகே வைத்தியரை தாக்கி 4 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
குளச்சல்:
குளச்சல் அருகே வைத்தியரை தாக்கி 4 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
வைத்தியர்
குளச்சல் அருகே உள்ள பெத்தேல்புரம் படுவாக்கரையை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 71). இவர் செம்பொன்விளையில் நாட்டு வைத்தியசாலை நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று மாலையில் ஜார்ஜ் நோயாளி ஒருவருக்கு மருந்து எண்ணெய் கொடுத்துவிட்டு வைத்தியசாலைக்குள் கையை கழுவிக் கொண்டிருந்தார்.
நகை பறிப்பு
அப்போது திடீரென அங்கு வந்த ஒரு வாலிபர் அவரை கீழே தள்ளிவிட்டு கழுத்தில் கிடந்த 4 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு வெளியே ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜார்ஜ் திருடன்... திருடன் என சத்தம் போட்டபடி வாலிபரை விரட்டிச் சென்றார். அதற்குள் அந்த வாலிபர் ரோட்டில் ேமாட்டார் சைக்கிளிலுடன் தயாராக நின்ற 2 கூட்டாளிகளுடன் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார். மொத்தம் 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அவர்கள் ஜார்ஜ் வைத்தியசாலையில் தனியாக இருப்பதை நோட்டமிட்டு சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
போலீஸ் ேதடுகிறது
பின்னர் இதுகுறித்து ஜார்ஜ் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
வைத்தியரிடம் நகை பறித்து சென்ற சம்பவம் அந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.