தந்தை- மகன் மீது தாக்குதல்
தந்தை- மகன் மீது தாக்குதல் நடத்திய அண்ணன், தம்பியை போலீசார் தேடி வருகின்றனர்.
வாணியம்பாடி சென்னாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் மோனிஷ் (வயது 28). இவர் அம்பூர்பேட்டை பகுதியில் உள்ள பொன்னியம்மன் கோவில் அருகே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே சென்ற பாலா (26) என்பவர், மோனிஷ் மீது எச்சில் துப்பியதாகவும், தட்டி கேட்ட மோனிஷ் மீது தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் பாலா மற்றும் அவரது தம்பி சிவா (22) ஆகிய இருவரும் மோனிஷ் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு அவர் இல்லாததால் அவருடைய தந்தை பழனிவேல் மண்டையில் சுத்தியலால் அடித்துள்ளனர். அப்போது அங்கு வந்த மோனிஷ் மீதும் தாக்கியுள்ளனர்.
இதில் மயங்கி விழுந்த தந்தை, மகனை அப்பகுதி மக்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைககாக அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக வாணியம்பாடி டவுன் போலிசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய பாலா மற்றும் சிவா ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.