கொத்தனார் மீது தாக்குதல்


கொத்தனார் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 11 April 2023 12:15 AM IST (Updated: 11 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொத்தனார் மீது தாக்குதல்

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருகே உள்ள முகமாத்தூர் பகுதியை சேர்ந்தவர் தாசன். இவருடைய மகன் அபிலாஷ் (வயது 33), கொத்தனார். இவரின் வீட்டின் முன்பு அதிக சத்தத்துடன் சிலர் மோட்டார் சைக்கிளில் சென்றதை அபிலாஷ் தட்டி கேட்டார். இதனால் அபிலாஷூக்கும், எலிக்குற்றி பாறை விளை பகுதியை சேர்ந்த ரூபன் சாமுவேல் (28) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் அபிலாஷ் வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த ரூபன் சாமுவேல், முகமாத்தூர் பகுதியை சேர்ந்த அஜின், அஸ்வின், இலுப்ப விளையை சேர்ந்த ஆகாஷ், பிரகாஷ் மற்றும் கண்டால் தெரியும் ஒருவர் என 6 பேர் சேர்ந்து அபிலாசை கம்பியாலும் கையாலும் தாக்கினர். இதில் அபிலாஷ் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் 6 பேர் மீதும் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story