தாய்- மகன் மீது தாக்குதல்
நிலப்பிரச்சினையில் தாய்- மகன் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு
விழுப்புரம்
விழுப்புரம் அருகே உள்ள கோலியனூர் வள்ளலார் நகரை சேர்ந்தவர் கவியரசு (வயது 27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ்(33) என்பவருக்கும் அருகருகே நிலம் உள்ளது. இந்நிலையில் பிரகாஷ், அவரது தம்பி தேவா, கதிர் ஆகியோர் கவியரசுக்கு சொந்தமான 3½ ஏக்கர் நிலத்தை அளந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கவியரசு, பிரகாஷ் உள்ளிட்ட 3 பேரிடமும், கோர்ட்டில் வழக்கு நடக்கும்போது எப்படி நீங்கள் நிலத்தை அளக்கலாம் என கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பிரகாஷ் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து கவியரசுவையும், அவரது தாய் கவுசல்யா(46) என்பவரையும் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த இருவரும் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து கவியரசு கொடுத்த புகாரின் பேரில் பிரகாஷ் உள்ளிட்ட 3 பேர் மீது வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.