நகராட்சி ஊழியர் மீது தாக்குதல்; அ.தி.மு.க. கவுன்சிலரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நகராட்சி ஊழியர் மீது தாக்குதல் நடத்திய அ.தி.மு.க. கவுன்சிலரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை நகராட்சியில் சின்னப்பா நகர் பகுதியில் குடிநீர் குழாய் தண்ணீர் திறப்பு பணியாளராக பணியாற்றி வருபவர் குமார். இவரை அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து புதுக்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் கரு.மணிவண்ணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள், அலுவலர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை தொடர்பாக கோஷங்களை எழுப்பினர். மேலும் கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நகராட்சி நிர்வாகம் மூலம் கணேஷ்நகர் போலீசில் புகார் மனு கொடுத்து உள்ளதாகவும் சங்க நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story