சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்
தக்கலை அருகே சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தக்கலை:
தக்கலை அருகே சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்
தக்கலை அருகே உள்ள புலிப்பனம், குற்றிக்காட்டுவிளையை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 57). இவர் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் சாமியார் மடத்திலுள்ள கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டிற்கு செல்ல புறப்பட்டார்.
அப்போது ஒரு ஆட்டோ அருகில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை இடித்து தள்ளிவிட்டு சென்றது. உடனே கருணாகரன் ஆட்டோ டிரைவரிடம் பார்த்து ஓட்டக்கூடாதா? என கேட்டுள்ளார். ஆட்டோவில் குடிபோதையில் இருந்த காட்டாத்துறை, புன்னைக்காடு பகுதியை சேர்ந்த ராஜேஷ் (34), அவருடைய நண்பர் ரவீந்திரன் (29) ஆகியோர் சேர்ந்து தகாத வார்த்தை பேசி கருணாகரனை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சாமியார்மடத்திலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
2 பேர் கைது
இதுகுறித்து தக்கலை போலீசில் கருணாகரன் புகார் செய்தார். அதன்பேரில் தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் இரவோடு இரவாக ராஜேஷ் மற்றும் ரவீந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்குபதிவு செய்து பத்மநாபபுரம் கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.