ஊட்டி அருகே சொத்து தகராறில் இளம்பெண் மீது தாக்குதல் -வாலிபர் கைது


ஊட்டி அருகே சொத்து தகராறில் இளம்பெண் மீது தாக்குதல் -வாலிபர் கைது
x
தினத்தந்தி 13 Feb 2023 12:15 AM IST (Updated: 13 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அருகே சொத்து தகராறில் இளம்பெண் மீது தாக்குதல் நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி

ஊட்டி

ஊட்டி அருகே சொத்து தகராறில் இளம்பெண் மீது தாக்குதல் நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சொத்தை அபகரிக்க முயற்சி

நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த லவ்டேல் அன்பு அண்ணா காலனியை பகுதியை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தனது கணவரை இழந்து விட்டதால், கணவரின் வீட்டில் மாமியாருடன் வசித்து வந்தார். இளம் பெண்ணின் மாமியாரின் உறவினரான மணிகண்டன் (26) என்பவரும் அதே வீட்டின் மற்றொரு பகுதியில் வசித்து வந்துள்ளார்.

ஏற்கனவே அந்த இளம் பெண்ணின் கணவர் இறந்து விட்டதால், சொத்துகளை அபகரிக்கும் நோக்கத்தில் மணிகண்டன் கடந்த சில நாட்களாக இளம் பெண் மற்றும் அவரது மாமியாரிடம் தகராறு ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் அவ்வப்போது மது குடித்து விட்டு வந்து வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

இளம்பெண் மீது தாக்குதல்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இளம் பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டு, வீட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு கூறி அவரை மணிகண்டன் தாக்கியுள்ளார்.

இதைத்தொடர்ந்து அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் லவ்டேல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஊட்டி கிளை சிறையில் அடைத்தனர்.


Next Story