தொழிலாளி மீது தாக்குதல்; ஒருவர் கைது


தொழிலாளி மீது தாக்குதல்; ஒருவர் கைது
x
தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளி மீது தாக்குதல்; ஒருவர் கைது

கோயம்புத்தூர்

கோவை

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த தொழிலாளி ரவி(வயது 56). கோவை-அவினாசி சாலையோரத்தில் அண்ணா சிலை அருகே தங்கியிருந்து, கூலி வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடன் தங்கியிருக்கும் ராஜ்குமார்(46) என்பவரிடம் 30 ரூபாய் கடன் வாங்கினார். அந்த பணத்தை திரும்ப கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ராஜ்குமார் பணத்தை திரும்ப கேட்டபோது, இப்போது தன்னிடம் பணம் இல்லை, பிறகு தருகிறேன் என்று கூறி இழுத்தடித்து வந்து உள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார், தகாத வார்த்தையால் பேசியதுடன், ரவியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.


Next Story