கஞ்சா விற்ற 4 பேரின் சொத்துகள் முடக்கம்


கஞ்சா விற்ற 4 பேரின் சொத்துகள் முடக்கம்
x

நெல்லை மாவட்டத்தில் கஞ்சா விற்ற 4 பேரின் சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி கடந்த நேற்று முன்தினம் பணகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்ராஜா பணகுடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளங்குளத்தை சேர்ந்த சிவா (வயது 21), வள்ளியூரை சேர்ந்த மாயகண்ணன் (23) ஆகியோரை கைது செய்தார். இதேபோல் கடந்த 4-ந்தேதி அம்பை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக சின்னதம்பி (52), அவரது மனைவி ரஞ்சனி (42) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களின் வங்கி கணக்கை முடக்கும்படி போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டதின் பேரில், அவர்களின் வங்கி கணக்கில் இருந்த ரூ.3 லட்சத்து 26 ஆயிரத்தை முடக்கம் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் இதுவரை கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 63 பேரில் 50 பேர் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு அதில் 39 பேரிடம் பிணை பத்திரம் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.


Next Story