ஆடி அமாவாசையை முன்னிட்டு உதவி கலெக்டர் ஆய்வு
ஆடி அமாவாசையை முன்னிட்டு சொரிமுத்து அய்யனார் கோவிலில் உதவி கலெக்டர் ரிஷாப் ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி
விக்கிரமசிங்கபுரம்:
காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவானது கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக நடைபெறாமல் இருந்தது. இந்தநிலையில் இந்த ஆண்டு வருகிற 17-ந் தேதி கால் நாட்டுதலுடன் தொடங்கி 28-ந் தேதி ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ளது.
இந்த நிலையில் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வந்த சேரன்மாதேவி உதவி கலெக்டர் ரிஷாப் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் விக்கிரமசிங்கபுரம் நகர்மன்ற தலைவர் செல்வ சுரேஷ் பெருமாள், நகராட்சி ஆணையாளர் கண்மணி மற்றும் கோவில் நிர்வாகத்தினர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story