மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள்


மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள்
x
தினத்தந்தி 6 Jan 2023 12:15 AM IST (Updated: 6 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்களை நகரமன்ற தலைவர் வழங்கினார்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் பூந்தோட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி மையத்தில் படிக்கும் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவிற்கு நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சக்கர நாற்காலி, நடைவண்டி, உட்காரும் நாற்காலி, செவித்திறன் கருவிகள் ஆகியவற்றை வழங்கி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

இவ்விழாவில் பூந்தோட்டம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகன், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணகுமாரி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவிக்குமார், ஆசிரியர் பயிற்றுனர் சிவராமன், சிறப்பு ஆசிரியர்கள் சத்யராஜ், மேரி, இயன்முறை மருத்துவர் செல்வஅரசி, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சண்முகம், நகரமன்ற கவுன்சிலர்கள் கோதண்டராமன், புல்லட்மணி, தி.மு.க. முன்னாள் வார்டு செயலாளர் லட்சுமிநாராயணன், அ.தி.மு.க. வார்டு துணை செயலாளர் ராம்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story